Sunday, October 30, 2011

7 ஆம் அறிவு

படத்தின் ஆரம்பத்தில் போதிவர்மாவை அறிமுக படுத்தும் காட்சியிலே தமிழன் என்ற உணர்வை கொண்டு வந்து இயக்குனர் பாதி வெற்றி அடைந்து விட்டார். பிறகு போதிவர்மாவை கதையில் கொண்டு வர உலக அரசியல் வரை போய், ஒருவழியாக நம்ம சென்னையில் அனைவரையும் சங்கமித்திருக்கிறார் முருகதாஸ். போதிவர்மாவின் அவதாரம் தான் கதையின் மையம் என்ற எதிர்பார்ப்புடன் படத்தின் இடைவேளை வருகிறது. அனால் நமது எதிர்பார்ப்புக்கு நல்ல தீனியாக இரண்டாம் பாகம் அமையவில்லை என்பது கசப்பான உண்மையே. சில குறைகள் இருந்தாலும் போதிவர்மா என்ற தமிழனை தமிழனுக்கு அறிமுகம் செய்தலில் முழு வெற்றி அடைந்திருக்கிறார் முருகதாஸ். இது போன்ற புது முயற்சி நிச்சயம் பாராட்டப்பட வேண்டியவை, அடுத்து பாராட்டப்பட வேண்டியவர் அரவிந்த், நம்ம சூர்யா தான் ரொம்ப மெனகெட்யிருக்கிறார். மொத்தத்தில் வரலாற்றை மறப்பது நம் அடுத்த தலைமுறைக்கு இழைக்கும் துரோகம் என்று சற்று ஆரவாரத்துடன் சொல்கிறார்கள். நீண்ட நாட்களுக்கு பிறகு நல்ல படம் பார்த்த திருப்தியுடன் இதை பதிவு செய்கிறேன். நன்றி...